திடீர் பதற்றம்! மீண்டும் வெடிக்கிறதா? ஹைட்ரோகார்பன் போராட்டம்! கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்கள்!   - Seithipunal
Seithipunal


அக்டோபர் 15 ஆம் நாள் திங்கள் கிழமை, கடலூர், நாகை மாவட்டங்களில் தமிழகத்திற்கு வேண்டாம் ஹைட்ரோ கார்பன் திட்டம்! (Frack Free Tamil Nadu) எனும் பிரச்சாரத்தை பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தொடங்கிய அமைப்பான பசுமைத் தாயகம் நடத்தியது. 

இந்த வாரத்தில், உலகின் பல நாடுகளில்  ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக  பிரச்சாரம் நடந்து வருகிறது. உலக அளவில்  Fracking  என அழைக்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து, தமிழகத்திலும் வரப்போவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் நடத்தியது. 

இந்த போராட்டத்தில் பசுமை தாயக அமைப்பினருடன் விவசாய சங்க உறுப்பினர்களும், பொது மக்களும், இயற்கை ஆர்வலர்களும் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். 

இந்நிலையில் அமைதியாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்து  கொண்டிருந்த போது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியதாக நாகைமாவட்டம் ஆனைக்காவல் சத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.  

இது குறித்து பசுமை தாயக அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ர.அருள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.  



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn police arrest green freak members for against hydrocorbon


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->