#BREAKING : கூடுதல் கட்டணம்., சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மங்களகரமான நாட்களில் பத்திர பதிவு அலுவலர்கள் செயல்படுவதற்கு அனுமதித்தும்,  அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (நாளை), ஆடிப்பெருக்கு 3.8 .2021 மற்றும் தைப்பூசம் 18 1 2022 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், மங்களகரமான நாட்களில் பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலர்கள் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவன பதிவுகளுக்கு பதிவு சான்றிதழ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கோரிக்கை வந்தது.

இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி (நாளை), ஆடிப்பெருக்கு 3.8 .2021 மற்றும் தைப்பூசம் 18 1 2022 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவினை மேற்கொள்ளும் மற்றும் அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt order april 13


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->