திடீரென டெல்லி சென்ற தமிழக ஆளுநர்! பின்னணி என்ன? பரபரப்பில் அரசியல் களம்!
TN Governor Delhi Visit may 25
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரின் மனைவி, செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் பயணித்தனர்.
அவரது பயணம் நான்கு நாட்கள் நீடிக்கிறது. இந்த பயணத்தைத் தொடர்ந்து, மே 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்.
இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இது அவரது வழக்கமான பயணமாகத்தான் கூறப்பட்டாலும், நான்கு நாள் திடீர் பயணம் எனப்படும் இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் டெல்லியில் குடியரசு திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுடன் மோதல், சட்ட மசோதாக்களின் நிலை, உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்களைத் தொடர்ந்து அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
English Summary
TN Governor Delhi Visit may 25