எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரம்...! 5,000 பேருக்கு கியூஆர் அனுமதிச் சீட்டு! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சரப்பாக்கத்தை அடுத்துள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சுமார் 45 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

பிரம்மாண்ட மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

அமைச்சர் என். ஆனந்த் முன்னின்று நடத்தி வரும் இவ்விழா ஏற்பாடுகளில், முதலமைச்சர் விஜய் நின்று பேசுவதற்காகச் சிறப்புப் பிரச்சாரப் பேருந்து மேடைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் 5,000 பேருக்குக் கியூஆர் (QR) குறியீடு பொறிக்கப்பட்ட பிரத்யேக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு, மதியம் 1 மணி முதல் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கச் கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கான வசதிகள்:

பொதுக்கூட்ட முகப்புத் தோற்றம் கம்பீரமான கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு, தவெகவின் கொள்கைத் தலைவர்களின் படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்குக் குடிநீர், தின்பண்டங்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நிகழ்வை அனைவரும் தெளிவாகக் காணும் வகையில் 10-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

வழியெங்கும் வரவேற்பு:

சென்னையிலிருந்து சாலை மார்க்கமாகப் புறப்பட்ட முதலமைச்சரைக் காண நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டதால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழியில் மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே பிரச்சாரக் களத்தை அடைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN CM Vijay Campaigns in Madurantakam Bypoll Elaborate Security QR Pass Entry Implemented


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->