ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு வெளியே கொண்டு வந்ததா? சிபிஎம் சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
Did the TVK government bring the Gem Veeramani case to light CPM Shanmugam makes a sensational allegation
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை தமிழக வெற்றிக் கழக அரசு தானாக முன்வந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என்றும், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சித்ததாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், ஜெம் வீரமணி வழக்கில் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தவெக அரசு நேர்மையான முறையில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த வழக்கை முடித்துக்கொள்ளும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக சண்முகம் கூறினார். எனவே, தங்களது அரசுதான் இந்த வழக்கை தீவிரப்படுத்தியதாக தவெகவினர் கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜெம் வீரமணி வழக்கு தீவிரப்படுத்தப்பட்டதற்கும், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டதற்கும் போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிதான் முக்கிய காரணம் என்றும் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து முழுமையான விவரங்கள் வெளிவந்தால்தான் உண்மை நிலவரம் தெளிவாகும் என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.
English Summary
Did the TVK government bring the Gem Veeramani case to light CPM Shanmugam makes a sensational allegation