கொம்பு முளைத்து விடுகிறதா? அந்த அரக்கர்களை சும்மா விடாதீங்க! தமிழக அரசுக்கு பாஜக தரப்பில் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என் சி சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் வேளையில், புகார் அளிக்கப்பட்டு எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்கு துணை நின்ற அல்லது மூடி மறைக்க பார்த்த அந்த பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வர் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

ஆசிரியர்களை நம்பித்தானே குழந்தைகளை தைரியமாக முகாமிற்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள். ஆனால், அந்த நம்பிக்கையை சிதைத்து குற்றவாளிக்கு துணைபோன இந்த நபர்களை மனிதர்களாக எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? 

குற்றமிழைத்த சிவராமன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் இந்த கொடூர செயலை செய்ததற்காள மரண தண்டனை தான் அளிக்கப்பட வேண்டும். 

அரசியல் கட்சிகளில் இருந்தால் என்ன? கொம்பு முளைத்து விடுகிறதா? இதில் மேலும் கொடுமை என்னவென்றால், கைதானவர்களில் நான்கு பேர் பெண்கள். அவர்களும் குழந்தைகளாக இருந்திருப்பார்களே! அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பார்கள் அல்லவா? 

ஆனால், ஒரு கேடுகெட்ட கெடுமதியாளனுக்கு எப்படி துணை போனார்கள்? ஒன்று பணத்திற்காக அல்லது அரசியல்வாதி என்கிற காரணத்திற்காக! அப்படி என்ன பணமும், அதிகாரமும்? அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை இனி யாரும் இது போன்ற குற்றவாளிகளுக்கு துணை போக அஞ்சும் வகையில் அமைய வேண்டும்.

குற்றச் செயல் புரிந்த சிவராமன் உள்ளிட்ட அனைவரின் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, சிறிதளவும் மனசாட்சி இல்லாத கொடூர எண்ணம் கொண்டவர்கள் எப்படி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தார்கள் என்பதை ஆராய்ந்து, இனி இது போன்ற செயல்களை தடுக்க கடும் விதிகளை உருவாக்க வேண்டும். அரசின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் கடந்து நம் சமுதாயம் பணத்திற்காக, அரசியல் அதிகாரத்திற்காக எந்த இழிநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை சீரமைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்" என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Narayanan condemn to Krishnagiri school girl abuse


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->