ஊருக்கு ஊற்றிக் கொடுத்து சாராய விற்பனை... திமுக அரசு தமிழகத்தின் சாபக்கேடு - பாஜக கண்டனம்!
TN BJP Condemn to DMK Govt TASMAC Diwali
தமிழக பாஜக தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கண்டன செய்திக்குறிப்பில், "சாராய விற்பனையில் சரித்திரம் படைத்த திராவிட மாடல் அரசு!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு முறையான பேருந்து வசதிகளை செய்து கொடுக்க முடியாத ஒரு அரசு,
பண்டிகை காலங்களில் கடைவீதிகளிலும் சாலைகளிலும் உண்டாகும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த முடியாத ஒரு அரசு,
தெருக்கள் தோறும் பெருகும் பட்டாசுக் குப்பைகளை சுத்தம் செய்ய போதிய தூய்மைப் பணியாளர்களை நியமிக்க முடியாத ஒரு அரசு,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத ஒரு அரசு,
தீபாவளியை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் ரூ.790 கோடிக்கும் அதிகமாக சாராயத்தை மட்டும் விற்றுள்ளது என்றால், இது எத்தனை பெரிய கேவலம்?
“போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்துவிட்டு, ஊருக்கு ஊற்றிக் கொடுத்து சாராய விற்பனையில் கொடிகட்டி பறக்கும் திமுக அரசு தமிழகத்தின் சாபக்கேடு" என்று தெரிவித்துள்ளது.
English Summary
TN BJP Condemn to DMK Govt TASMAC Diwali