#BigBreaking || சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார்., அதிகாரபூர்வ அறிவிப்பு.!
tn assembly opposite vice leader RP Udhayakumar
தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்து வரும் ஓபிஎஸ், அதிமுகவின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுகவின் பொதுக்குழு நீக்கி இருக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த அதிமுகவின் எம்எல்ஏ.,க்களின் கூட்டத்தின் போது, எதிர்க்கட்சி துணைத் துணைத்தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிது.
மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், அதிமுகவின் தலைமை கொறடா எஸ்பி வேலுமணி, இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவுடம் நேரடியாக சென்று வரும் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாகவும், அந்த பதவியில் ஆர்.பி உதயகுமாரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

English Summary
tn assembly opposite vice leader RP Udhayakumar