ஆ.ராசாவுடன் திமுகவின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு தனி நாடு கேட்க வேண்டும் - தமிழ் நடிகை டிவிட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்திரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"ஆ.ராசாவுடன் திமுகவின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு தனி நாடு கேட்க வேண்டும். ஆனால் நாங்கள் உங்களுக்கு தமிழ்நாட்டை கொடுக்க மாட்டோம். 

நீங்கள் விரும்பினால், கொலம்பஸ் மற்றும் கால்டுவெல் போல் கப்பலில் பயணம் செய்து, ஒரு தீவு கண்டுபிடித்த பிறகு பெரியாரின் விருப்பப்படி பெயரை “திராவிட நாடு” வைத்து வாழலாம். 

இந்த இந்திய மண் சேர, சோழ, பாண்டிய, விஜயாக்கிரகங்களுக்கு சொந்தமானது. தமிழர்களாகிய நாம் இங்கே இந்தியாவில் மகத்தான மன்னர்களின் பாதையில் சனாதனவாதிகளாக இருக்கிறோம். 2/2.

ஆ.ராசாவுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அவர்களுக்கு மத்திய பதவி வேண்டும் ஆனால் தனி நாடு வேண்டும். மக்களை ஏமாற்றும் போலிகள். 

இதுபோன்ற பேச்சுக்காக 2ஜி வழக்குடன் சிறை தண்டனை விதிக்க வேண்டும்" என்று காயத்திரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tmil actress say about dravida nadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->