திமுகவினர் இடையே மோதல்.. கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து மருமகனை நிறுத்திய திமுக நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தொடங்கியது.

இதையடுத்து தென்காசி, குற்றாலம் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கரூர், புலியூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சேலம், நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. பூந்தமல்லி நகராட்சி தலைவராக திமுகவின் காஞ்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து திமுக நகர செயலாளர் முருகன் தனது மருமகளை நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirumangalam dmk members fight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->