'செவாலியே' விருது பெரும் தோட்டா தரணிக்கு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து!
Thotta Tharani CM MK Stalin Edappadi Palaniswami
புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலைத் துறை பங்களிப்பைப் பாராட்டி, பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செவாலியர் விருதும் பெறும் தோட்டா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியார் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணிக்கு, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரிய ஆளுமைகளின் வரிசையில் தோட்டா தரணி இணையுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சானைக்குப் பாராட்டுகள்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே" அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்! என்று கூறியுள்ளார்.
English Summary
Thotta Tharani CM MK Stalin Edappadi Palaniswami