திருப்பரங்குன்றம் யாருக்கு...? - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன நச் பதில்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை பிடிக்க முக்கிய கட்சிகள் தங்கள் கூட்டணி கணக்குகளை தீவிரமாக அமைத்து வரும் நிலையில்,  தமிழக வெற்றிக்கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி,நாம் தமிழர் கட்சி ஆகியவை மோதும் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் தென்படுகிறது.

இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, கூட்டணிக்கான தொகுதி உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம், திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அங்கு ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ உள்ளார்; எனவே அந்த வகையான கோரிக்கைகளை எங்களால் முன்வைக்கப்படவில்லை” எனத் தெளிவுபடுத்தினார்.மேலும், முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தொகுதிகளை பாஜக அதிமுகவிடம் கேட்டதாக பரவிய தகவல்களையும் அவர் மறுத்தார்.

“அத்தகைய எந்த தொகுதியையும் நாங்கள் கோரவில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனால், கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு, அரசியல் தந்திரங்கள் என தேர்தல் களம் மேலும் பரபரப்பை எட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruparankundram for who What answer given by BJP Nainar Nagendiran


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->