அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இன்று அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுகுழு தீர்மானம் படி ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுகளுக்கு உட்பட்டது என்ற ஒரு நிபந்தனையையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அவர், "பொதுச் செயலாளராக ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆனதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan wish ADMK GS EPS 2023


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->