பாஜகவுடன் விசிக கைகோர்க்க தயார்..!! கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருமாவளவன் அதிரடி..!!
Thirumavalavan spoke ready to join VCK alliance with BJP
கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்த அருமனையில் கிருத்துவ அமைப்பு சார்பில் நடைபெற்ற 25வது கிறிஸ்துமஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மதங்களுக்கிடையே வெறுப்பை வளர்க்கிறது. மத அரசியலை வளர்க்கும் சங்பரிவார் அமைப்புகளை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் ஒட்டு மொத்த இந்துக்களை எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். சாதாரண இந்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. எங்கள் வீட்டில் இருப்பவர்களும் ஹிந்துக்கள் தான், கட்சி உறுப்பினர்களின் 80 சதவீதம் பேர் இந்துக்கள் தான்.

பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தங்களின் கொள்கையை மாற்றிக் கொண்டால் அவர்களுடன் கைகோர்ப்பதில் ஒருபோதும் எங்களுக்கு தயக்கம் இல்லை" என விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருமாவளவனின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Thirumavalavan spoke ready to join VCK alliance with BJP