ஆளுநருக்கு எதிராகக் கொதிக்கும் திருமாவளவன்! முதல்வர் ஸ்டாலினுடன் அவசர ஆலோசனை...! - 'தாமதம் செய்வது சரியல்ல' என எச்சரிக்கை
Thirumavalavan seething against Governor Urgent consultation Chief Minister Stalin Warning that delaying not right
தமிழக சட்டப்பேரவையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ள தவெக, பெரும்பான்மையை எட்டுவதற்கு மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவை நாடி வருகிறது. திமுக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி நேற்று தவெகவுக்கு தனது ஆதரவை அறிவித்தது.

காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தற்போது கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 உறுப்பினர்களின் துணை அவசியமாகியுள்ளது.இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரசியல் பரபரப்பான சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக மரபுக்கு ஏற்றதல்ல. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு கிடைத்திருப்பது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் விஜய்க்கு தொடர்ந்து இடையூறுகள் உருவாக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
English Summary
Thirumavalavan seething against Governor Urgent consultation Chief Minister Stalin Warning that delaying not right