தேச துரோக வழக்குகளில் தண்டனை குறித்து திருமாவளவன் எழுப்பிய கேள்வியும்.. மத்திய அமைச்சர் பதிலும்.!! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான தேசத்துரோக வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விகிதம் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை குறித்தான தரவுகள் அரசிடம் இருக்கிறதா? ஆம் எனில். அதன் விவரம். பதிவான தேசத்துரோக வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள வழக்குகளின் விகிதம் எவ்வளவு என்பது குறித்தான விவரங்கள் அரசிடம் உள்ளதா? ஆம் எனில். அதன் விவரம். 

நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எழுப்பிய மேற்கண்ட கேள்விகளுக்கு இந்திய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அவர்கள் அளித்துள்ள பதிலில்: 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏழாவது அட்டவணையின் படி ‘பொது ஒழுங்கு’ மற்றும் ‘காவல்துறை’ மாநில அதிகாரத்தில் உள்ளது. குற்றங்களை பதிவு செய்தல், விசாரித்தல், வழக்கு தொடுத்தல் ஆகியவையும் சட்டம் ஒழுங்கை கடைபிடித்தல் உள்ளிட்ட பொறுப்புகளும் அந்தந்த மாநில அரசிடம் உள்ளது. தேசிய குற்ற ஆவண மையம் ‘இந்தியாவில் குற்றங்கள்’ என்னும் தனது வெளியீட்டில் குற்றங்கள் குறித்தான தகவல்களை தொகுத்து வெளியிடுகிறது. 2020 ஆம் ஆண்டு வரையில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேசத்துரோக குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும்  தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின்  விகிதம் ஆகியவற்றின் தரவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan question in parliament


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->