பாஜக ஒரு அரசியல் கோமாளி! திருமாவளவன் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியலமைப்புச் சட்ட நாள் விழா நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "அரசியல் கட்சிகளாக இருக்கின்ற அனைவருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிடும் உரிமை இருக்கிறது. அதுபோல தான் சிதம்பரம் தொகுதியும் அனைத்து கட்சிகளும் போட்டியிடும் தொகுதியாகும். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக போட்டியிடட்டும் எங்கள் கொள்கைக்கு எதிரான பகைவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை அவ்வாறே எதிர்கொள்வோம். தமிழகத்தில் பாஜகவை தனிமைப்படுத்தி தேர்தலில் எதிர்கொள்ளும் அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக தமிழகத்தின் எதிர்கட்சியாக உள்ளது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டும், காட்ட வேண்டும் என முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களை தமிழக மக்கள் அரசியல் கோமாளிகளாகவே பார்க்கின்றனர். 

நம்ம ஊரு சூப்பரு பேனர் விவகாரத்தில் அதிமுக ஆதாரம் இல்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறது. அதை திமுக எதிர்கொள்ள வேண்டிய முறையில் எதிர்கொள்ளும். தேர்தல் வேலைகள் என்பது முக்கியமல்ல மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து களப்பணிகளை திட்டமிட்டுள்ளோம். உரிய நேரம் வரும்போது தேர்தல் பணிகளை மேற்கொள்வோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan criticized BJP is a political Joker


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->