அம்பேத்கருக்கே காவி உடையா..!! ட்விட்டரில் பொங்கிய திருமாவளவன்.!!
Thirumavalavan condemns poster of Ambedkar dressed in saffron
அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அவருடைய சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் அம்பேத்கருக்கு பட்டை, குங்குமம், காவி உடை உடுத்தியது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என வாசகம் இடம்பெற்று இருந்தது. டாக்டர் அம்பேத்கரை இந்து சமயத்தை சார்ந்தவராக சித்தரிக்கப்பட்ட போஸ்டருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் "சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை பார்ப்பானிய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை தன் இறுதி மூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்தில் இருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லை பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மன நோயாளிகளை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்க மாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை, குங்குமமிட்டு, காவி உடை போட்டு அவரை அவமதித்துள்ள மதவாத பித்தர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan condemns poster of Ambedkar dressed in saffron