திருமாவளவன்-அண்ணாமலை திடீர் சந்திப்பு.!!
Thirumavalavan Annamalai sudden meet in Melmaruvathur
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவருடைய குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூற பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்காரு அடிகளார் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவர்கள் பங்காரு அடிகளார் குடும்பத்தினரை சந்தித்து விட்டு புறப்படும் நேரத்தில் அங்கிருந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் வேல்முருகன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவனின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிய வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Thirumavalavan Annamalai sudden meet in Melmaruvathur