தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல - விசிக தலைவர் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவிற்கும் தமிழகத்திற்கும் நல்லதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக ஆளுநர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசுக்கு எதிரான ஓகே விட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார்.

மேலும் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பது பாஜகவுக்கு சாதகமாக அமையும். போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்குவது அதிமுகவிற்கு நல்லதல்ல. அதேபோல் தமிழகத்தில் பாஜக வளர்வது தமிழகத்திற்கும் அதிமுகவிற்கும் நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒத்துழைப்பு தரும். மேலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thermacula friends speech about BJP and ADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->