அவர்கள் வேலை அது...அதற்காக அரசு நெருக்கடி தருகிறது என்று சொல்ல முடியுமா?-விஜயை தாக்கி பேசிய செல்வப்பெருந்தகை
their job can you say government pressuring them for that Selva Perundakai attacks Vijay
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 'செல்வப்பெருந்தகை' பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்ததாவது,"வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தை எங்கள் கட்சியினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது கூட்டணிக்குள் எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தாது. அவர்களின் கருத்துகளை நான் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையிடம் எடுத்துச் செல்வேன். ஆனால் இறுதி முடிவு எடுப்பது காங்கிரஸ் தேசியத் தலைமையும் பொறுப்பாளர்களுமே.மேலும், தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களின் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி,தவெக உடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. அதற்கு அவசியமோ தேவையோ இல்லை. ‘இந்தியா’ கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை, இருக்கவும் வாய்ப்பில்லை.மேலும், நடிகர் விஜய் தனது சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களிடம் உரையாற்ற விரும்பினால், காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்.
அப்போதுதான் அவர் பேசும் கருத்துகளை மக்கள் அறிய முடியும்.எங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அரசு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் போராடித் தான் அனுமதி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
ஆனால் அதற்காக அரசு நெருக்கடி தருகிறது என்று சொல்ல முடியாது. காவல்துறை தங்களின் பணியை அவர்கள் செய்கிறார்கள். எங்களின் போராட்டமும் தொடரும்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
their job can you say government pressuring them for that Selva Perundakai attacks Vijay