ஓங்கும் அண்ணாமலையின் கை…விட்டுக் கொடுத்த நயினார்! ஏக கடுப்பில் எடப்பாடி!அதிமுக–பாஜக கூட்டணியில் புதிய பதற்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுக–பாஜக கூட்டணியில் மீண்டும் பதற்றம் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதற்கு காரணமாக முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய அரசியல் நகர்வுகளே சொல்லப்படுகின்றன. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் திரும்பக் கொண்டு வர முயற்சி செய்வது எடப்பாடி பழனிச்சாமியின் அதிருப்தியை தூண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததே இரு கட்சிகளுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த இரு தரப்பும் 2026 தேர்தலை ஒன்றாகச் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அண்ணாமலை எடுத்த சில முடிவுகள் கூட்டணிக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

முக்கியமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் தினகரனை சந்தித்து வரும் அண்ணாமலையின் நகர்வை எடப்பாடி கடும் அதிருப்தியுடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பிரச்சனை வேண்டாம், பிரிந்தவர்களை திரும்ப வரவழைப்பது சரியல்ல என எடப்பாடி வலியுறுத்தி வருகிறார்.

இந்த அதிருப்தியை நயினார் நாகேந்திரன் மூலம் டெல்லி தலைமைக்கு எடப்பாடி ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், “வருட்காலம் முழுவதும் நான் கட்சியை வலுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்; இந்நிலையில் அண்ணாமலையின் நடத்தை அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கும்” என்று எடப்பாடி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக, அதிமுக நிர்வாகிகள் சிலர் எடப்பாடியை நேரடியாக சந்தித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலை மீது கட்சித் தலைமையிலிருந்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என எடப்பாடி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த புதிய பதற்றம் கூட்டணியின் நிலையை எப்படி பாதிக்கும் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The hand of Annamalai is rising the Nayinar who gave up Edappadi is in a state of extreme hardship New tension in the AIADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->