'அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு கேட்டார்கள்'; சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர்..!
The CPIM General Secretary stated that AIADMK sought support from outside the party to form the government
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க 118 என்ற பெரும்பான்மை இல்லாத நிலையில், அக்கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் இன்னும் அவர்களும் அதிகாரபூர்வமாக ஆதரவு கடிதத்தை இன்னும் வழங்கவில்லை.
அத்துடன், இந்தி முஸ்லீம் கட்சியும் தனது ஆதரவு நிலைப்பாட்டை பின்வாங்கியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்று தங்கள் கட்சிக்கான ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சி.பி.ஐ.எம் தவெகவிற்கு ஆதரவு வழங்கியமைக்கான காரணம் இதுதான் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளதாவது;
"காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக அந்த எண்ணிக்கையை பெறுவதற்கு முன்பே, நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவை அளித்துவிட்டோம். திமுகவுடனான எங்களது பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்ற கொள்கைகளிலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம். என்று எம்.ஏ.பேபி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The CPIM General Secretary stated that AIADMK sought support from outside the party to form the government