முதலமைச்சரின் பொங்கல் கொண்டாட்டம்; 'அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்' என பதிவு..!
The Chief Minister MK Stalin Pongal celebration
சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
''அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!
செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்!'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
English Summary
The Chief Minister MK Stalin Pongal celebration