கண் கலங்கிய விஜய்..? கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசுப் பணி மற்றும் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வழங்கியமுதல்வர்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய் இன்று கரூர் சென்றார். கடந்தாண்டு அங்கு தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி மற்றும் ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி விஜய்யின் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதோடு, அவர்களை சென்னை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதலும் கூறினார்.

இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, பணியாணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி மற்றும் ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா, விஜயலட்சுமி, எம்.பி. ஜோதிமணி, கிருஷ்ணராயபுரர் எம்எல்ஏ எம்.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வினை தொடர்ந்து, மணவாசியில் தனியார் காலணி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை முதல்வர் விஜய் நாட்டினார். அதன் பின்னர் காங்கிரஸ் எம்பி செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு அரசுப் பணி வழங்குவதை அரசியலாக பார்க்கக் கூடாது என்றும், இது மகிழ்ச்சியான நிகழ்ச்சி இல்லை. பணியானை பெற்றவர்கள் கண் கலங்கியதோடு, முதல்வரும் பணியானை வழங்கும்போது அழுததாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister gave government jobs to 31 families of the deceased in Karur and Rs 10 lakh to one


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->