'அது சுத்த அதிகப்பிரசங்கித்தனம்'...! - பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சண்முகம் கொடுத்த நறுக் பதிலடி...! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பதிவில், "தமிழ்நாடு சமூகநீதி மற்றும் முற்போக்கு அணியின் (த.வெ.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) முதல் மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை பெருமையுடனும் பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது சமூக வலைதள பதிவு மூலம் அதற்கு பதிலளித்துள்ளார்.அவரது பதிவில், புதிய கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி, அதனுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் இணைத்திருப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோருவது தொடர்பாகவோ தங்களிடம் யாரும் ஆலோசனை நடத்தவில்லை என்றும், எந்தவித அணுகுமுறையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய ஆதரவு எந்த அரசியல் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அரசியல் உண்மைகளுக்கு முரணான முன்கூட்டிய அறிவிப்பாக அமைந்துள்ளதாகவும், அதை "அதிக பிரசங்கித்தனம்" என்றே வர்ணிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் பெ. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் மாநிலங்களவை தேர்தல் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், எதிர்கால கூட்டணி அமைப்புகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

That pure hyperbole Shanmugam sharp response to Praveen Chakravarthy post


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->