ஜூன் 18 முதல் அதிரப்போகும் தமிழக சட்டசபை...! கவர்னர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் கூடுகிறது பேரவை...விவாதங்கள் பறக்குமா...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். புதிய அரசின் முதல் சட்டப்பேரவை அமர்வு என்பதால் அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் பேரவையில் உரையாற்ற உள்ளார்.

அரசின் எதிர்கால திட்டங்கள், வளர்ச்சி நோக்கங்கள் மற்றும் முக்கிய கொள்கை அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் ஆங்கில உரையை தொடர்ந்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசித்து உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகளை பதிவு செய்ய உள்ளனர்.

அடுத்த கட்டமாக 2026–2027 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பொதுமக்கள் பார்வைக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Assembly held from June 18 assembly meet Governor Rajendra Arlekar address debates lively


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->