சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பில், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள தேஜஸ்வி யாதவ்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும் என்றும் இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான உச்சவரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tejashwi Yadav has written a letter to Prime Minister Modi regarding the caste based census


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->