டாஸ்மாக் வழக்கு நிபந்தனை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!
TASMAC Scam DMK Leader Senthil Balaji Appears Before Police as Per Court Order
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின்படி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாக அவர் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனைகளைத் தொடர்ந்து முறையாகப் பின்பற்றும் வகையில், அவர் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்று தன் கையொப்பத்தைப் பதிவு செய்தார். இச்சம்பவம் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
English Summary
TASMAC Scam DMK Leader Senthil Balaji Appears Before Police as Per Court Order