ரஜினி- ஆளுநர் சந்திப்பு குறித்து.. ஆளுநர் தமிழிசை வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நேரில் சந்தித்தார்.  இந்த சந்திப்புக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதாவது ஆளுநருடன் அரசியல் தொடர்பாக பேசினேன்.

எனினும் அதை பற்றி தற்போது சொல்ல முடியாது. அப்போது மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா.? என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி பதிலளித்தார்.அதனை தொடர்ந்து பேசிய ரஜினி, காஷ்மீரில் பிறந்து அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ரவி. இப்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

தமிழர்களின் கடினஉழைப்பு, நேர்மை ஆகியவை மிகவும் பிடித்து இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தின் நன்மைக்காக, நலனுக்காகதான் என்ன செய்யவும் தயார் என்று அவர் என்னிடம் கூறினார்." என்று தெரிவித்து இருந்தார். ஆனால், அவர் ஆளுநரை சந்தித்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், "ஆளுநர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர்களது, சந்திப்பில் சமூகம், கலை, விஞ்ஞானம் அரசியல் உள்ளது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அரசியலை தனியாக பிரித்து பார்க்க இயலாது. நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்ததை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamizhisai speech about Rajinikanth meet Governor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->