பாமகவின் கோரிக்கை நிறைவேறுகிறது?! வெளியாகிறது தமிழக அரசின் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிக அளவில் குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மூல காரணங்களாக இருக்கும் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி மிக தீவிரமாக போராடி வருகிறது.

மதுவிலக்கு கேட்டு பல பல ஆண்டுகளாக பாமக போராடி வரும் நிலையில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பாமக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதனையடுத்து தமிழக அரசும் பாமகவின் வலியுறுத்தலுக்கு செவி சாய்த்து போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டினை அழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க தமிழக உள்துறை செயலாளரை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, வருகின்ற சுதந்திர தினத்தன்று மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

இந்த நிலையில் சுதந்திர தின உரையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் மக்கள் நலனில் பாமகவின் அடுத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Govt planned reduce tasmac shops


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->