ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான கொலை - கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 4 விவசாயிகள் கார் விபத்தில் பலியாகினர். ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் வந்த 4 பேரை அடித்து கொலை செய்தனர். இதனால் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் வன்முறையாக மாற, விவசாயிகள் கார் மோதி உயிரிழந்தது திட்டமிட்ட தாக்குதல் என கூறி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தொடங்கின. 

லக்கிம்பூர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இன்று பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உட்பட 3 பேர் விவசாயிகளின் குடும்பத்தினரை காண அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வீட்டிற்கு அவர்கள் செல்லவுள்ளனர். 

இந்நிலையில், இதனை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, " ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றது. இந்த படுகொலையை விட உத்திரபிரதேச படுகொலை மோசமானது. 

மத்திய அமைச்சரது மகன் கார் ஏற்றியதில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 9 பேர் இறந்துள்ளனர். ஆங்கிலேயே அரசு கூட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பஞ்சாப் செல்ல அனுமதி வழங்கியது. தற்போது, விவசாயிகளின் உயிரிழப்புக்கு பின்னர், அவர்களை சந்திக்க விடாமல் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Congress State President Condemn UP Govt Farmer Murder Issue 6 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal