அதிமுகவுக்கு தாவிய காங்கிரஸின் முக்கிய புள்ளி.!! தட்டி தூக்கிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். 

பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய புள்ளி அதிமுகவில் இணைந்திருப்பது காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இடப்பாடி பழனிச்சாமியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளரும் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத்தலைவரும் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரமான ஆர்.பி உதயகுமார், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனிசாமி உள்ளிட்ட உடன் இருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Congress secretary joined in AIADMK


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->