#JustIN: குடியரசுத்தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல புறப்பட்டார். 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், டெல்லிக்கு சென்று இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதன்போது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருந்ததால், இந்த பயணம் தள்ளிப்போனது. 

இதனையடுத்து, தற்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க நாளை (19/07/2021) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல புறப்பட்டார். 

மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தனி விமானம் மூலமாக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். டெல்லிக்கு செல்லும் தமிழக முதல்வர் நாளை மாலை 5 மணியளவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருக்கிறார். 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், 7 பேர் விடுதலை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்புவிழாவுக்கு குடியரசு தலைவர் நேரில் வர அழைப்பு விடுக்க செல்லலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CM MK Stalin Went Chennai Airport to Travel Delhi Meet President of India


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->