Vishwa karma || குறுக்குசால் ஓட்டும் குறு மதியாளர்களுக்கு தமிழிசை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் மகத்தான திட்டமான விஸ்வகர்மா திட்டம் குலத்தொழில் கல்வி என்று சிறுமைப்படுத்தி குறுக்கு சால் ஓட்டும் குறு மதியாளர்களை வன்மையாக கண்டிப்பதாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ரூபாய் 13000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயதொழில் செய்யும் அனைவரும் சுயமரியாதையுடன் முன்னேறவும் கிராமப்புறம் மற்றும் நகர்புற பாரம்பரிய கைவினை தொழிலாளர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம். 

1) கருவி வாங்க - ₹ 15,000 மானியம்.

2) பயிற்சி நாட்களில் தினசரி ₹ 500 உதவித்தொகை.

3) 5 சதவீத பட்டியில் முதல் தவணையாக ஒரு லட்சம் கடன்.

4) இரண்டாம் தாணியாக 2 லட்சம் கடன்

தச்சர்கள், பொற்கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள், கொத்தனார், சிகை திருத்தும் தொழிலாளர்கள் உட்பட 18 வகையான பாரம்பரிய கைவினை வர்த்தக தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இந்த மகத்தான திட்டத்தை பாராட்ட மனம் இல்லாமல் குலத்தொழில் கல்வி என்று சிறுமைப்படுத்தி குறுக்குசால் ஓட்டும் குறு மதியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai response on Vishwa karma scheme criticism


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->