'தேர்தல் பிரச்சாரத்தில் கருத்து சுதந்திரம் பற்றி பேசியவர்கள் மாரிதாஸை கைது செய்துள்ளனர்'; முதல்வர் விஜய்யின் நடவடிக்கையை விமர்சித்துள்ள தமிழிசை..! - Seithipunal
Seithipunal


''தேர்தல் பிரச்சாரத்தின் போது கருத்து சுதந்திரம் பற்றி பேசிய முதல்வர் விஜய், ஆளும் ஆட்சியை எதிர்த்து விமர்சித்து பேசுபவர்களைக் கைது செய்யும் சம்பவங்களைக் கண்டித்தார். ஆனால், இப்போது இவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது  கூறியதாவது;

தேர்தல் பிரச்சாரத்தின் போது கருத்து சுதந்திரம் பற்றி பேசிய முதல்வர் விஜய், ஆளும் ஆட்சியை எதிர்த்து விமர்சித்து பேசுபவர்களைக் கைது செய்யும் சம்பவங்களைக் கண்டித்தார். ஆனால், இப்போது இவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆட்சியில் குறைபாடுகள் இருப்பதாக தகுந்த தரவுகளுடன் கூறி, அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அவர் குறிப்பிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், வக்பு சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறுகிறார். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா. அதை செயல்படுத்த மாட்டோம் என்று ஒரு அமைச்சர் கூறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இது மதச்சார்பற்ற அரசு என்று கூறி கொள்கின்றனர். ஆனால், இது மதம் சார்புடன் செயல்படும் ஒரு அரசாக, மாறிக்கொண்டு இருக்கிறதோ என்ற தோற்றத்தையும், இந்து மத எதிர்ப்பு அரசாங்கமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுகிறது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். இதற்கு நீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறார்கள் என்றும் ஒரு பாரபட்சமான அரசு நடந்துகொண்டு இருக்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன், அரசு தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டு, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்த்து செயல்பட்டு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல், ஆட்சியை குறைகூறுபவர்களைக் கைது செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தவெக அரசை விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai has criticized Chief Minister Vijays action regarding the arrest of Maridhas


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->