'காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை'; டிகேஎஸ் இளங்கோவன் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


''காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை. திமுகவை தேர்தல் வெற்றி, தோல்விகள் அசைத்துவிட முடியாது'' என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். எங்கள் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டதால், அவை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அதன் அடிப்படையில் சண்முகம் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், ஒரு கட்சி எடுக்கக் கூடிய முடிவுகளை நாம் விமர்சிக்கக் கூடாது என திமுக தலைவர்  சொல்லியுள்ளதாகவும், அது அந்தந்த கட்சியின் உரிமை என்றும், பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி கண்டிப்பாக வலிமையான கூட்டணியாக மறுபடியும் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை என்றும், திமுகவை தேர்தல் வெற்றி, தோல்விகள் அசைத்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகள், தோல்விகளை நாங்கள் (திமுக) சந்தித்துள்ளோம் என்றும், கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. அந்த கொள்கையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், வெற்றி பெறும்போது கொள்கைகளை செயல்படுத்துவோம் என்றும், வெற்றி பெறாவிட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் அந்த கொள்கையை செயல்படுத்த அழுத்தம் தந்து போராடுவோம் என்று டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TKS Elangovan categorically stated that the DMK is not part of the INDIA alliance formed by the Congress


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->