'தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்!’ பாராளுமன்றத்தில் கமல்ஹாசன் தீவிர பதில்...! - திருமாவளவன் திறந்த ஆதரவு - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மேடையில் தமிழில் உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தமிழ்மொழியை இகழ்ந்து பேசுவோருக்கு கடும் சொற்களால் பதிலடி கொடுத்தார்.

வெளிநாட்டு கல்வி, ஆங்கில ஆதிக்கம், நிதி திரட்டும் அரசியல் போன்றவற்றை சுட்டிக்காட்டிய அவர், “தமிழ் பிச்சை எடுக்க பயன்படாது; அது தலையை நிமிர்ந்து வாழ கற்றுத்தரும் மொழி.

 

தமிழன் எப்போதும் யாரிடமும் கைநீட்ட மாட்டான்” என தீவிரமாக பேசினார். தமிழ் மற்றும் தமிழர்களின் மரியாதையை யாராலும் விலைக்கு விற்க முடியாது என்றும், தன்னுடைய அரசியல் பயணம் தாய்மொழி மரியாதைக்காகவே என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான மனநிலையை வெளிப்படுத்துபவர்களுக்கு கமல்ஹாசன் தக்க பதில் கொடுத்துள்ளார்.

அவரின் துணிச்சலான நிலைப்பாட்டுக்கு எங்கள் பாராட்டுகள். தமிழினமே அவரை வாழ்த்துகிறது; அதனால் சிலருக்கு வயிற்றெரிச்சல் அதிகமாகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பான கேள்விக்கு, “அது குறித்து சொல்ல ஒன்றுமில்லை; அவர்கள் அவர்களது வழியில் செய்கிறார்கள்” என சுருக்கமாகக் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilian not beg Kamal Haasan strong response Parliament Thirumavalavan offers open support


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->