தமிழக அரசியலில் பரபரப்பு! மீண்டும் களமிறங்கும் சசிகலா…! - புதிய கட்சி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் அரங்கம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சிப் போட்டியை நோக்கி அனைத்து கட்சிகளும் வேகமாகத் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தங்களின் வாக்கு வங்கி வலுப்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட தயாராக மைதானத்தில் களமிறங்கி வருகின்றன.

இதற்கிடையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் பட்டாளி மக்கள் கட்சி ஆகியவை இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்காமல் மவுன அரசியலில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்த பரபரப்பான சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரசியல் களத்தில் கால் பதிக்கத் தீர்மானித்துள்ள வி.கே. சசிகலா, புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலை நேரடியாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர், அரசியல் ரீதியாக தனது ஆதரவாளர்களை மீண்டும் ஒன்றிணைக்க தொடங்கியுள்ளார்.அண்ணா நினைவு நாளில் மெரினாவில் மரியாதை செலுத்தியபோது, “எதிரியும் துரோகியும் யார் என்பதை மக்கள் அறிவார்கள்; வரும் தேர்தலில் ‘அம்மா ஆட்சி’ மீண்டும் மலரும்” எனத் தன்னம்பிக்கை முழக்கமிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, போயஸ் கார்டனில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி புதிய கட்சிக்கான தளத்தை அமைத்தார்.மேலும், உசிலம்பட்டி தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னை மீண்டும் அரசியல் மேடையில் நிலைநிறுத்த உறுதியுடன் நகரும் சசிகலாவின் இந்த நடவடிக்கைகள், தமிழக தேர்தல் அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கி, போட்டியை மேலும் கடுமையாக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu politics state flux Sasikala back fray New party announcement


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->