தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள்: 'தமிழகம் பீஹார் அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!
Tamil Nadu is not Bihar but a state where people are aware says Minister Duraimurugan
வரும் அக்டோபர் முதல் நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை ஒரு மத காலத்திற்கு மேற்கொள்ள ஆலோசனை செய்து வருவதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளமை குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''தமிழகம் பீஹார் அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என என்று பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: திமுக கூட்டணி சிதறும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் போகிற போக்கில் பேசுகிறார். பாவம். ஏதாவது பேச வேண்டும் என்று தான் பேசுகிறார். எதிர்க்கட்சி தலைவர் எங்களுக்கு ஆதரவாகவா பேசுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, விஜய் கட்சி நிகழ்ச்சிக்கு திமுக தடை என சொல்லும் தவெகவின் ஆனந்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், எனது அரசியல் சர்வீஸ் வேறு. அவர்களது அரசியல் சர்வீஸ் வேறு என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்துக்கு எப்படியாவது கெட்ட பெயர் வேண்டும் என பிரதமர் நினைத்தால் அது நல்லது அல்ல என்றும், அப்படி நினைப்பாரா என சந்தேகம் உள்ளதாகவும், ஆனால் நிலைமை அப்படி தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், அன்புமணி பாமக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, அவர்கள் வீட்டுக்குள் நடக்கும் சமாச்சாரம் நமக்கு எதுக்கு என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகம் பீஹார் அல்ல. தமிழகம் என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்குள்ளது போல், இங்கு நிர்வாகம் இல்லை. இங்கு ஸ்டாலின் தலைமை உள்ளது. இதுபோன்ற தந்திரங்கள் தமிழகத்திலோ அல்லது தலைவரிடம் வேலை செய்யாது என்று கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu is not Bihar but a state where people are aware says Minister Duraimurugan