திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுதாரர் கேவியட் மனுத் தாக்கல்..!
Tamil Nadu government appeals to Supreme Court in Thiruparankundram case
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதேநேரத்தில் மனுதாரர் ராம ரவிக்குமாரும் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளை அமர்வில் தமிழக அரசு முறையிட்டது. ஆனால்,குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அத்துடன், இன்று இரவுக்குள் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதனை தமிழக அரசு நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது தான் பிரச்சினை. மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என்றும், உயர்நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் சட்டப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இருப்பரங்குன்றம் வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமார், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதாவது, உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.
English Summary
Tamil Nadu government appeals to Supreme Court in Thiruparankundram case