தமிழக பட்ஜெட் 2026 -27; இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரம் 'அறிவகம்' உருவாக்கப்படும்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2,142 கோடி ஒதுக்கீடு..! - Seithipunal
Seithipunal


நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டபேரவையில் தாக்​கல் செய்து உரையாற்றினார். அப்போது தொழில் துறையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து கூறப்பட்ட அறிவிப்புகளை கீழே காணலாம்.

2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதே நமது அரசின் குறிக்கோள் என்று அறிவித்துள்ளார்.

அடுத்ததா, தவெக அரசு பொறுப்பேற்றவுடன் 14,790 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ரூ.35,062 கோடி மதிப்பிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் புதிய துறைமுகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை இந்த அரசு ஆராயும் என்றும், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தன் நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அடுத்து, முதலீட்டாளர்கள் உள்ளூர் சூழலை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் வகையில் விரிவான டிஜிட்டல் தளமாக தமிழ்நாடு தொழில் திறன் விவரப்பட்டியலை அரசு உருவாக்கும் என்றும், தமிழ்நாட்டின் போட்டித் திறனை மேலும் செம்மைப்படுத்த 'வழிகாட்டி 3.0' எனும் புதிய முதலீட்டு சேவை அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் முக்கிய அங்கமாக 'தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம் 3.0' செயல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டு திட்டங்களுக்கும் தேவையான அரசு அனுமதிகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஒருங்கிணைத்து ஒரே இடத்திலேயே பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவை பிரிவு அமைக்கப்படும் என்றும், புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் சுமார் 3200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த ஐந்தாண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

மிக முக்கியமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக 'அறிவகம்' தமிழகத்தில் உருவாக்கப்படும் என்றும், இதில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை இடம்பெறும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, தொழில், முதலீட்டு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறகாகவும் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் வெளியான அறிவிப்புகள் குறித்து கீழே காணலாம்;

பதிவு செய்யப்பட்ட 43.47 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த நிதியாண்டில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 225 கோடி ரூபாயும், மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் 352 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பசுமை எஃகு உற்பத்தி முன் முயற்சி திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான இந்த நிதி ஆண்டில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் 2026 இல் அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Budget 2026 announces Indias first artificial intelligence city Arivakam to be created


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->