ஆச்சரியம்! கடந்த ஆண்டு மட்டும் 1.46 கோடி பாஸ்போர்ட்கள் விநியோகம்...! - எஸ். ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


நேற்று 'பாஸ்போர்ட் சேவை தினம்' கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளிநாடு மற்றும் உள்நாடுகளிலுள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவை பிரிவு அதிகாரிகளுக்கும் மத்திய வெளியுறவு துறை மந்திரி 'எஸ்.ஜெய்சங்கர்' வாழ்த்துச்செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அவர்,"நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மத்திய அரசின் நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

இவை அனைத்தும் பாஸ்போர்ட் சேவைகளில் பிரதிபலிப்பதாக உள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு 91 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும், இதனை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சேவைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான முதல்கட்ட பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய நடைமுறை அனைத்து இந்திய தூதரகங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.மற்றுமொரு மைல்கல் நடவடிக்கையாக மின்னணு பாஸ்போர்ட் சேவைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாஸ்போர்ட்டில் மின்னணு 'சிப்'கள் பொருத்தப்படுவதன் மூலம் மின்னணு சாதனங்களின் வாயிலாக பயணிகளின் விவரக் குறிப்புகளை நேரடி தொடர்பின்றி பெறுவதன் மூலம் மக்களின் பயணம் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளும் எளிமைப்படுத்தப்படும். காவல் துறையினரின் சரிபார்ப்பு நடவடிக்கைகள் 5 முதல் 7 நாட்களுக்குள் நிறைவு பெறும் வகையில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'மொபைல் பாஸ்போர்ட்' காவல் செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஓராண்டு காலத்தில் தபால் அலுவலகங்களில் 10 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் குஷி நகரில் 450-வது தபால் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் மக்களுக்கு வாகனங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பணியாளர்கள் மற்றும் தொழில் முறை சார்ந்தவர்கள் உலக அளவில் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு இது உதவுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surprise Last year alone 1point46 crore passports were issued S Jaishankar


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->