இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன் - கனிமொழி!
Supreme Court TN Governor case dmk kanimozhi
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை குறிப்பிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?" என்று கேட்டபோது, "கவர்னர் வேலை பார்ப்பது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Supreme Court TN Governor case dmk kanimozhi