தவெக அரசுக்குக் காத்திருக்கும் எதிர்ப்புப் புயல்...! தஞ்சை மண்ணில் தி.மு.க.வின் அதிரடி கண்டனப் போராட்டம்...! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு குறுவை சாகுபடி 6.5 லட்சம் ஏக்கரில் நடைபெற்று புதிய சாதனையைப் பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் குறுவை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான முழு பிரீமியம் தொகையையும் அரசே ஏற்று, அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான காப்பீட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பா சாகுபடியை மீண்டும் உற்சாகமாக தொடங்குவதற்காக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் இடுபொருட்களுக்கும் சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுக்கத் தவறியதாக த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கட்சியின் முதன்மைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு வரவேற்புரையாற்றுகிறார்.

இந்தப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

storm protest awaits tvk government DMK protest action Thanjavur


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->