ஆபாச வீடியோ மிரட்டல்...! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை...! - பள்ளி மாணவர் மீது போக்சோ...! - Seithipunal
Seithipunal


கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 'சிங்கப்பெண் அதிரடிப் படை' உதவி எண்ணை தொடர்புகொண்டு பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தனக்கு 16 வயதாக இருந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், தன்னை விட இரண்டு வயது இளைய 14 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.அந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியதாகவும், ஒருநாள் அந்த மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் சம்பவத்தை செல்போனில் காணொளியாக பதிவு செய்ததாகவும், தற்போது அந்தக் காணொளியை காட்டி தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரை காவலர்கள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கோவை மாநகர மகளிர் காவலர்கள், தற்போது பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதுகுறித்து காவலர்கள் தெரிவிக்கையில், "புகார் அளித்த இளம்பெண்ணுக்கு தற்போது 19 வயது என்றாலும், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவருக்கு 16 வயதே இருந்தது.

அதனால், குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pornographic video threat College student harassed POCSO on school student


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->