“வதந்திகளை நிறுத்துங்கள்…நான் யாரையும் சந்திக்கவில்லை” புயலை கிளப்புவாருன்னு பார்த்தா.. பின்வாங்கும் செங்கோட்டையன்.. எடப்பாடி ஹேப்பி?
Stop the rumors I havenot met anyone Seeing that he going to stir up a storm the retreating Sengottaiyan Edappadi Happy
அதிமுகவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தற்போது அதனை மறுக்கும் வகையில் அமைதியாக உள்ளார். குறிப்பாக, அவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கப் போகிறார் என்ற வதந்திகள் சில நாட்களாக பரவி வந்தன. ஆனால், செங்கோட்டையன் இவற்றைத் தெளிவாக மறுத்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,“அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர். அது வேதனை அளிக்கிறது. யார் வதந்திகளை பரப்புகிறார்களோ, அவர்களே அதை நிறுத்திக் கொண்டால் நலமாக இருக்கும். இது எச்சரிக்கை அல்ல; அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:“நேற்று, முன்தினம் என பல்வேறு விளக்கங்களை வழங்கியபோதும் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகிறார்கள்.நான் சொந்த வேலையை முடித்து ரயிலில் கோபி வந்தடைந்தேன்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் கனவுகள் நிறைவேற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
யாரையும் சந்திக்கவில்லை. வதந்திகளுக்குப் பதில் கூறிக் கொண்டே இருக்க முடியாது.நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.”
தன்னுடைய நீண்டகால அரசியல் பயணத்தைப் பற்றியும் செங்கோட்டையன் கூறியுள்ளார்:“45 ஆண்டுகளாக தூய்மையாகப் பணியாற்றி வருகிறேன். விசுவாசமான தொண்டனாக இருந்து வருகிறேன். கோபி தொகுதி மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். மக்கள், தொண்டர்கள், கழகம் – இவை தான் எனது உயிர்மூச்சு” என வலியுறுத்தினார்.
இந்த அறிக்கையால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போராட்ட மனப்பான்மையுடன் வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அரசியல் வட்டாரங்களின் மதிப்பீட்டுப்படி,செங்கோட்டையன் தற்போது சமாதான நிலைப்பாட்டில் உள்ளார்.அவர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக எதிர்க்க விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது.முன்பு, அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை திரும்பச் சேர்க்க முன்வருவார் எனக் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை.இதனால், அதிமுகவில் உடனடியாக பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
English Summary
Stop the rumors I havenot met anyone Seeing that he going to stir up a storm the retreating Sengottaiyan Edappadi Happy