காசா மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துங்கள்...! -உலக மனசாட்சியை உலுக்கிய ஸ்டாலின் பேச்சு
Stop Israels attack on Gaza Stalins speech that shook conscience world
சென்னையில் நேற்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் கவனத்தை ஈர்த்தது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று தன் உறுதியான குரலை எழுப்பினார்.
இந்த பெரும் கூட்டமாக திரண்ட பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பாலஸ்தீனத்துக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக பாலஸ்தீனக் கொடியை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். “பாலஸ்தீனுக்கு நீதி வேண்டும்!”, “காசா இனப்படுகொலை நிறுத்தப்படவேண்டும்!” என்ற முழக்கங்கள் முழு அரங்கையும் அதிர வைத்தன.

அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆழ்ந்த மன உணர்வுடன் தெரிவித்ததாவது ,"மனிதநேய சிந்தனை கொண்ட ஒவ்வொருவரும் காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்க வேண்டும். 11,000 பெண்களும், 17,000 குழந்தைகளும், 175 பத்திரிகையாளர்களும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். 26,000 குழந்தைகள் பெற்றோரற்றவர்களாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவுக்காக வரிசையில் நின்ற 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்ற சம்பவம் என் இதயத்தை நொறுக்கியது. இத்தகைய அநீதியை கண்டிக்காமல் அமைதியாக இருக்க முடியுமா? காசாவில் பச்சிளம் குழந்தைகள் கூட கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். இது மனித இனத்திற்கு ஒரு கறையாகும்.
இந்த இனப்படுகொலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மனிதநேயத்தின் சார்பாக குரல் கொடுக்கிறது,” என அவர் உருக்கமாகப் பேசினார்.மேலும், இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, உடனடியாக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசு சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அவர் அறிவித்தார்.
English Summary
Stop Israels attack on Gaza Stalins speech that shook conscience world