அரச பயங்கரவாதம்! திமுக அதிமுக என்றில்லை... எல்லா காலங்களிலும் விசாரணை இப்படியாகத்தான் இருக்கிறது! - திருமாவளவன் - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் பலியான அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.அப்போது அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

தொல்.திருமாவளவன்:

அதன் பிறகு நிருபர்களிடம்  அவர் தெரிவித்ததாவது,"காவல்நிலைய மரணங்கள் என்பது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது.நானும் காவல்நிலைய விசாரணையை எதிர்கொண்டவன் தான். காவலர்களின்  தமிழ் விசாரணை போக்குபற்றி நன்றாக தெரியும்.

அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என காவலர்கள் நினைக்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சி அவசியம்.திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி என்றில்லை. எல்லா காலத்திலும் காவலர்களின் விசாரணை முறை இப்படியாகத்தான் இருக்கிறது.முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதலைத் தருகிறது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது.காவல்துறையினர் ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டது.புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று 11 கட்டளைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை எந்த காவல்நிலையத்திலும் பின்பற்றுவதில்லை.அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம்.அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

State terrorism not DMK not AIADMK Investigations have always been like this Thirumavalavan


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->