தேர்தலுக்கு ஸ்டாலின் சூப்பர் ஸ்ட்ராட்டஜி! ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’! - இன்று மாநிலம் முழுவதும் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


2026-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக இன்னும் தீவிரமாக தன் தேர்தல் ஆயத்தங்களை உறுதிசெய்துள்ளது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து இயக்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தினரை உற்சாகத்துடன் செயல்படச் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்ட “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பிரசாரத் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் தொடக்கக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்கிறார்.மேலும், மாநிலம் முழுவதும் இன்று முதல் வாக்குச்சாவடி அடிப்படையிலான உறுதிப்படுத்தும் பிரசாரம் துவங்குகின்றது.

வீடு–வீடாக சென்று வாக்காளர்களை அணுகும் பூத் கமிட்டிகளில் பெண்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி வரவிருக்கும் 2026 தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி மேலும் வலுப்பெற செய்யும் ‘கிராஸ் ரூட்’ பிளானாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalins super strategy election My polling booth Victory polling booth begins across state today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->